fbpx

Tn Govt : அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.882 ஊதியமாக வழங்கப்படும்…!

அரசு போக்குவரத்து கழக தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.882 ஊதியமாக வழங்கப்படும்.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாளொன்றிற்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.535 மட்டுமே வழங்கப்பட்டது. இது குறைந்தபட்ச கூலி சட்ட விதி, போக்குவரத்து தொழிலாளர்களின் ஒப்பந்த விதிகள் உள்ளிட்டவற்றுக்கு முரணாக இருப்பதாக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலமுறை போராட்டமும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.882 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொது மேலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த 9-ம் தேதி நடைபெற்ற வாரிய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அரசாணையின்படியும் ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்குமான குறைந்தபட்ச ஊதியத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, நாளொன்றுக்கு டிசிசி பணியாளர்களுக்கு ரூ.882-ம் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.872-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Government transport employees will be paid Rs.882

Vignesh

Next Post

பாரிஸ் ஒலிம்பிக்!. தொடரும் சீனாவின் ஆதிக்கம்!. 6-ம் நாள் முடிவில் பதக்கம் வென்றவர்களின் முழு பட்டியல்!.

Fri Aug 2 , 2024
Paris Olympics: Complete List Of Medal Winners At The End Of Day 6

You May Like