fbpx

ஆளுநர் அரசியல்வாதி அல்ல..!! இனி இப்படியெல்லாம் பேசாதீங்க..!! திடீரென ஆளுநருக்கு எதிராக எகிறிய அண்ணாமலை..!!

ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள். யாரையும் பிரிப்பதற்காக இல்லை. பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட நல்ல சட்டம். யாருக்கு எதிராக உங்க சட்டம் இருக்கப் போவது கிடையாது” என்றார்.

பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், “வருகின்ற காலத்தில் அதிமுக நிலைப்பாடு மாறும் என நம்புகிறேன். பாஜக மீது எப்படி இந்த சட்டத்தை கொண்டு வரப் போகிறார்கள் என அதிமுக நம்பிக்கைக்கொள்ள வேண்டும். அதிமுக – பாஜக பல்வேறு கருத்து முரண்பாடு இருந்தால் கூட வருகின்ற காலத்தில் எல்லாம் சரி செய்யப்படும். அனைத்து கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்றார்.

ஆளுநர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆளுநர் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆளுநர் அவரை கடமையை மட்டுமே செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

வெறும் ரூ.99 இருந்தால் போதும்..!! உங்கள் ஃபோனையும் மழையில் நனைய விடலாம், தண்ணீரில் போட்டு விளையாடலாம்..!! எப்படி தெரியுமா..?

Wed Jul 5 , 2023
மழைக்காலம் வந்தாலே வெயிலில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும். மழை பெய்தால், மரங்கள், செடிகளும் உயிர் பெறும். அதோடு மழையில் நனைவது மிகவும் வேடிக்கையான ஒன்று. ஆனால், பருவமழை காலத்தில் எங்கும் செல்ல முடியாது. இதுபோன்ற நிலையில், நீங்கள் வெளியில் செல்லும் போது, ​தொலைபேசியும் உங்களுடன் இருக்கும். அதனால் வெளியே செல்லும் போது போன் நனைந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. உங்கள் ஃபோன் அதிக நீர் எதிர்ப்புத் திறன் […]

You May Like