fbpx

ஆளுநரின் செயல் சிறுப்பிள்ளை தனமானது.. அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல..!! – முதலமைச்சர் காட்டம்

டெல்லி விரைகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!! தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு..!!

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகம் வந்த ஆளுநர் ரவி, தமிழ்தாய் வாழ்த்து பாடிய சில நிமிடங்களிலே புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது’ என ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களிலே அந்த பதிவு நீக்கப்பட்டு, பின்னர் மீட்டும் பதிவிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என பதிவிட்டுள்ளார்.

Read more ; வந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர்.. விளக்கம் அளித்த பதிவு சில நிமிடங்களில் நீக்கம்..!!

English Summary

Governor’s actions are childish.. This is unbecoming of the position he is holding..!! – Chief Minister Stalin

Next Post

பொங்கல் பண்டிகை 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!! சொந்த ஊர் செல்வோருக்கு போக்குவரத்துத்துறை சொன்ன குட் நியூஸ்..!!

Mon Jan 6 , 2025
An additional 5,736 buses will be operated on January 10, 11, 12 and 13, in addition to the 8,368 buses that normally operate.

You May Like