fbpx

தீபாவளியை தொடர்ந்து, வரவுள்ள கிரகணம்.. இதை மட்டும் செஞ்சிடாதீங்க.. எச்சரிக்கை.!

பூமியில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தைக் காணவிருக்கின்ற நிலையில் தீபாவளியை ஒட்டி அது நிகழ இருக்கின்றது. இந்த ஆண்டில் மட்டும் நான்கு கிரகணங்கள். அவைகளில், இரண்டு சந்திர கிரகணங்கள் மற்றும் இரண்டு சூரிய கிரகணங்கள்.

தற்போது, வர இருக்கும் சூரிய கிரகணம் தீபாவளிக்கு பின் நிகழு இருக்கிறது. ஆண்டு முடிவடையும் நிலையில், இரண்டாவது சூரிய கிரகணம் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 அன்று விழுகிறது.

இதனை, ஐரோப்பா, வடகிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் தெரியும் என அறியப்படுகிறது. சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு கிரகணம் முடிவடைவதை காண முடியாது. பகுதி சூரிய கிரகணத்தை அனுபவிக்கும் இந்திய நகரங்கள் சென்னை, புது டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மதுரா, உஜ்ஜைன், வாரணாசி ஆகிய பகுதிகள் ஆகும். இந்த சூரிய கிரகணம் ஒரு மணி நேரம் நீடிக்கும் .

இந்த கிரகணத்தை அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து பார்க்க முடியாது.
சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 – 50 சதவீதம் வரை இருக்கும். சூரிய கிரகணங்கள் சில பகுதிகளில் மட்டுமே தெரியும், அவற்றை வெறும் கண்ணால் பார்ப்பது ஆபத்தானது என கூறப்படுகிறது.

கொல்கத்தா மற்றும் சென்னையில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக தொடரும். இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை..!! பேரவையில் மசோதா தாக்கல்..!! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

Wed Oct 19 , 2022
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை..!! ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி  இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் […]

You May Like