fbpx

சூப்பர்…! இயற்கை உரங்களை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.1500 வழங்க அரசு ஒப்புதல்…!

இயற்கை உரங்களை ஊக்குவிக்க, சந்தை மேம்பாட்டு உதவியாக ரூ.1500 வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கூறியதாவது; விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அரசு மானியம் வழங்குகிறது. ‘உரங்களில் நேரடி பணப் பரிமாற்றம்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சில்லறை விற்பனைக் கடையிலும் நிறுவப்பட்டுள்ள பிஓஎஸ் கருவிகள் மூலம், ஆதார் சரிபார்ப்பின் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்பனை செய்யப்படும் உர நிறுவனங்களுக்கு, பல்வேறு உர நிலைகளில் 100% மானியம் வழங்கப்படுகிறது. 2019-20 முதல் 2024-25 வரை (22.07.2024 நிலவரப்படி) ரூ.8,59,548.91 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊட்டச்சத்து நிறைந்த உரங்கள், மண் பரிசோதனை அடிப்படையிலான சரிவிகித மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகளை சீரான மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகள் மூலம், கனிம மற்றும் கரிம ஆதாரங்கள் (மக்கிய உரம், உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள் போன்றவை) இரண்டையும் ஒன்றிணைத்து பயன்படுத்துதல், நைட்ரஜன் உரங்களைப் பிரித்தல் மற்றும் வைப்பது, மெதுவாக வெளியிடும் தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்துதல், நைட்ரிபிகேஷன் தடுப்பான்கள் மற்றும் வேம்பு பூசப்பட்ட யூரியா போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.

சீரான உர பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு, உள்நாட்டு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து, நாட்டு யூரியா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட யூரியா போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குகிறது. மேலும், இயற்கை உரங்களை ஊக்குவிக்க, சந்தை மேம்பாட்டு உதவியாக ரூ.1500 வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய நிலத்தடி நீர் வாரியத்திடம் உள்ள நிலத்தடி நீர் தரம் குறித்த விவரங்கள், பல்வேறு பயனீட்டாளர்களின் பயன்பாட்டிற்காக அறிக்கைகள் மற்றும் வலைதளம் (https://cgwb.gov.in) வாயிலாக, பொதுமக்களுக்கு கிடைக்கின்றன. தேவையான தீர்வு நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு, இந்த புள்ளி விவரங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

English Summary

Govt approves Rs 1500 to farmers to encourage natural fertilizers

Vignesh

Next Post

சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?. 50 நாட்களை கடந்த பயணம்!. ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்!

Sun Aug 4 , 2024
A journey past 50 days! What happened to Sunitha Williams? Shocking information of the researchers!

You May Like