fbpx

390+ பேருக்கு அரசுப்பணி!… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TNPSC ஆணையத்தின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வானவர்கள் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 219 பேரும், குரூப் 2 பணிகள் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 பேரும், இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு 29 பேரும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: பாலியல் புகாரில் சிக்கிய ‘MANJUMMEL BOYS’ இயக்குனர்.!! நடந்தது என்ன.?

Kokila

Next Post

Nigeria: 300 பள்ளி மாணவர்கள் கடத்தல்!… காப்பாற்ற முயன்ற ஒருவர் சுட்டுக்கொலை!… தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவம்!… அச்சத்தில் பெற்றோர்கள்!

Mon Mar 11 , 2024
Nigeria: நைஜீரியாவில், சுமார் 300 பள்ளி மாணவா்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. இந்த நாட்டின் வடமேற்கு நகரமான கடுனா மாகாணத்தின் குரிகாவில் கடந்த 9ம் தேதி 280க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குரிகாவை உள்ளடக்கிய கடுனா மாகாணத்தின் ஆளுநரான உபா சானியும் இத்தகவலை உறுதிப்படுத்தியிருந்தார். துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர், அப்பள்ளிக்குள் […]

You May Like