முதல்வர், கோட் சூட் அணிந்து சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா சென்றதால் அரசு பணம் வீணாகியதை தவிர, தமிழகத்திற்கு முதலீடு ஏதும் வந்ததாக தெரியவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு பதில் சொல்லாத முதல்வர், யாருடைய கேள்விக்கு பதில் சொல்வார் என்று தெரியவில்லை.
மேகதாது அணை பிரச்சனையில் முதல்வர் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருந்தால் எப்படி தடுக்க முடியும். மேகதாது அணை பிரச்சனை, சாராய சாவு, அந்நிய முதலீடு குறித்து வாய் திறக்காத மௌன சாமியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கின்றார். 75 ஆண்டுகால இந்திய ஆட்சியில் வருமான வரி சோதனையின் போது தாக்குதல் நடத்தியது தான் திராவிட மாடல் ஆட்சி.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராகி விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கின்றார் – ஆர்.பி உதயகுமார்