fbpx

இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டத்தில் மட்டும் தான்..

அரியலூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவியர் மாமன்னர் ராஜேந்திர சோழன்.. தமிழ்நாட்டில் பல நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய ராஜேந்திர சோழன் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளிலும் சோழர்களின் ஆட்சியை நிலைநிறுத்தினார்.. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்..

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த விழா கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா விமரிசையாக நடைபெற உள்ளது.. அதன்படி இன்று ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இன்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அரியலூர் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Maha

Next Post

அடுத்த மாதம் இந்த 9 நாட்கள் வங்கிகள் இயங்காது... ரிசர்வ் வங்கி அறிவிப்பு...

Tue Jul 26 , 2022
ஆகஸ்ட் மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் […]

You May Like