fbpx

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்..!! ஹால்டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..?

பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர்‌ பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்‌ தேர்வு வாரிய அறிவிக்கையின்படி, 2023-2024 ஆம்‌ ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்‌, வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வினை எழுத 41,478 தேர்வர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

எனவே, தேர்வர்கள்‌ இன்று (டிசம்பர் 22) முதல்‌ அவர்களது User id மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ ஏற்படும்‌ கடைசி நேர பதற்றத்தைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்‌டுள்ளது. ஆகையால், தேர்வர்கள்‌ தேர்வுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Chella

Next Post

’மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன்’..!! மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காட்டமான பதிவு..!!

Fri Dec 22 , 2023
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் பேட்டியளித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் […]

You May Like