fbpx

பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வு வாரியம்..!!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 13,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில், முதற்கட்டமாக 2,582 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வருகின்ற 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற இருந்தது. இதனால், தேர்வர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிற்சி புத்தகங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

இதனால் போட்டித் தேர்வு எழுதும் தென் மாவட்ட ஆசிரியர்களின் நிலையை கருதி, தேர்வு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, போட்டி தேர்வு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டை வைத்து தேர்வு எழுதலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Chella

Next Post

’தமிழ்நாட்டில் அந்த வார்த்தையை யாரும் பயன்படுத்தக் கூடாது’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

Thu Dec 28 , 2023
சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கைதிகளை, தற்காலிகமாக உரிய காரணத்தின் அடிப்படையில் சில காலம் விடுவித்தல் ‘பரோல்’ எனப்படும். தண்டனைக் கைதிகள் தங்களுக்கு விடுமுறை கோரி விண்ணப்பிப்பார்கள். தீவிர நோய்வாய்ப்படுதலால் அவசர சிகிச்சை பெறுதல், குடும்ப உறுப்பினர் இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சாதாரண, அவசர கால விடுப்பு கோரி விண்ணப்பிப்பார்கள். இந்த விடுப்புக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தருவார்கள். அந்த விடுப்பை சிறை அதிகாரி எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். ஒருவேளை […]

You May Like