fbpx

வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…! அரசு திட்டங்களை விவாதிக்க உத்தரவு…!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற குடியரசு தினமான 26.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற குடியரசு தினமான 26.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும். மேலும், கிராம ஊராட்சிகள். தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும்.

English Summary

Gram Sabha meeting on the 26th at 11 am.

Vignesh

Next Post

ஆசையோடு வந்த காதலனை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்த கிரீஷ்மா..!! குற்றவாளி என தீர்ப்பு..!! தண்டனை இன்று அறிவிப்பு..!!

Sat Jan 18 , 2025
The Neyyattinkarai Additional Sessions Court ruled that Krishma was the culprit in this case.

You May Like