fbpx

கிரிக்கெட் கிரவுண்டில் பேரனின் பிறந்தநாள் விழா.. தடபடலாக கொண்டாடிய ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்கிற ஆண் குழந்தை உண்டு. பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இவர்களுக்கு வீர் ரஜினிகாந்த் என ஆண் குழந்தை இருக்கிறது. மேலும் சௌந்தர்யாவும் இயக்குனராக தயாரிப்பாளராக மற்றும் கிராபிக் டிசைனர் ஆகவும் சினிமாவில் பணியாற்றி வருகிறார்.

தற்போது சௌந்தர்யாவின் மூத்த மகன் மற்றும் ரஜினிகாந்தின் பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாளை நேற்று தடபுடலாக கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள டர்ப் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து கேக் கட் பண்ணி நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அழைப்பு கொடுத்து பங்க்ஷன் நிகழ்ச்சியை சிறப்பித்து கொடுத்திருக்கிறார் ரஜினி.

இவருடைய பேரன் கிரிக்கெட் டீமில் இருப்பதால் அவருக்கு பிடித்த மாதிரி ஒரு தீம்-மை வைத்து மிகப்பெரிய சர்ப்ரைஸை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். தற்போது இவர்கள் கொண்டாடிய பிறந்தநாள் பார்ட்டியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“1 சதவிகித வாய்ப்பு கூட போதுமானது” விராட் கோலி, அண்ட் பூமா போஸ்டர் வைரல்!

Next Post

’அடையாளமே தெரியல’..!! நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அதிபரின் உடல் மீட்பு..!!

Mon May 20 , 2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி, விமானி, பாதுகாப்புத் தலைவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்திருந்தனர். விழாவை முடித்துவிட்டு திரும்பி செல்லும்போது ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த […]

You May Like