fbpx

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபாரம்!. இந்திய மகளிர் அணி சாதனை வெற்றி!. வைரலாகும் செல்ஃபி!.

Ind W vs SA W Test Cricket: தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி 3-க்கும் 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க மகளிரை ஒயிட் வாஷ் செய்தனர்.

தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி தொடர் சென்னையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்களை எடுத்தது.

தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 205 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவும் 149 ரன்கள் குவித்தார். இந்திய வீராங்கனைகளின் அபார பேட்டிங் திறமையால் தென் ஆப்பிரிக்காவுக்கு 604 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா பெரிய அளவில் யாரும் சோபிக்கவில்லை.

இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். முதன் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க மகளிர் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். முதல் இன்னிங்சில் 337 ரன்கள் பின்தங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா வீராங்கனைகள் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடினர்.

இரண்டாவது இன்னிங்சில் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் (122 ரன்), மற்றொரு வீராங்கனை சுனே லாஸ் (109 ரன்) ஆகியோரை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இந்திய வீராங்கனைகளின் மிரட்டலான பந்துவீச்சை கடைசி தென் ஆப்பிரிக்க மகளிரால் எதிர்கொள்ள முடியவில்லை.

இறுதியில் 154 புள்ளி 4 ஓவர்களில் 373 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்திய வீராங்கனைகள் தரப்பில் சினே ரானா, தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்தரகர், ஷபாலி வர்மா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 37 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் சுபா சதீஷ் (13 ரன்), ஷபாலி வர்மா (24 ரன்) ஆகியோர் விக்கெட் இழப்பின்றி ரன் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தன்வசப்படுத்தியது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

Readmore: வெயில் தாக்கம்!. ஹஜ் பயணம் மேற்கொண்ட தமிழர்கள் 10 பேர் மரணம்!.

English Summary

Great against South Africa!. Indian women’s team record win! A viral selfie!

Kokila

Next Post

அட இது தெரியாம போச்சே!! சீனியர் சிட்டிசன்களுக்கான 'வயோஸ்ரீ யோஜனா திட்டம்' பற்றி தெரியுமா?

Tue Jul 2 , 2024
More than two lakh senior citizens have benefited under the 'Rashtriya Vyoshri Yojana' scheme, which provides assistance and safety equipment to senior citizens living below the poverty line.

You May Like