ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வேங்கடராகவாபுரம் கிராமத்தில் வெங்கடரத்தினம், புன்னம்மாள் தம்பதிக்கு இளைய மகனாக 1924இல் நாகேஸ்வரராவ் பிறந்தார். இளம் வயதிலேயே நாடகத்துறையில் நுழைந்து பெண் வேடங்களில் நடித்தார். பின்னர் 1940இல் முதன் முதலாக “தர்மபத்தினி” எனும் தெலுங்கு சினிமாவில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார்.
இதுவரை அவர் 256 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஒரு இந்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களும் அடங்கும். அன்னபூர்ணாவைத் திருமணம் செய்து கொண்ட நாகேஸ்வரரா விற்கு, இரண்டு மகன்கள், 3 மகள்கள். அதில் சரோஜா மூன்றாவதாக பிறந்தவர். நாகேஸ்வர ராவின் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சினிமாவில் இருக்கும் போது சரோஜா மட்டும் விலகியே இருந்தார். இந்நிலையில், பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மூத்த சகோதரியும் நாகேஸ்வர ராவின் மகளுமான நாக சரோஜா உயிரிழந்தார். சரோஜா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.