19 Hajj pilgrims killed: கடும் வெப்பத்தால் சவூதி அரேபியாவில் 19 ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமியர்களின் ஸ்தாபகரான முஹம்மது நபியின் பிறப்பிடமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் வருடாந்திர புனித யாத்திரை ஹஜ் ஆகும். ஹஜ் உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றாகும், மேலும் இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியா பாலைவனங்களுடன் கூடிய வெப்பமான மேற்கு ஆசியப் பகுதியில் அமைந்துள்ளதால், அப்பகுதி பொதுவாக வெப்பமாக இருக்கும். பல ஆண்டுகளாக ஹஜ்ஜின் போது வெப்பம் தொடர்பான பிரச்சினைகள், ஹீட் ஸ்ட்ரோக் போன்றவை பதிவாகியுள்ளன.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. அந்தவகையில் மெக்காவில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வாட்டுகிறது. மேலும் இது இன்று(திங்களன்று) 47டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடும் வெயில் காரணமாக ஹஜ் யாத்திரை சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இறந்த யாத்ரீகர்களில், 14 பேர் ஜோர்டானைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண, சவுதி அதிகாரிகள் காலநிலை கட்டுப்பாட்டு பகுதிகளை கட்டியுள்ளனர் மற்றும் யாத்ரீகர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க மருத்துவ குழுக்களை நியமித்துள்ளனர்.
Readmore: இப்படி ஒரு தந்தையா? பணத்துக்காக 12 வயது மகளை… விஷயம் தெரிந்த போலீஸ்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?