fbpx

பெரும் சோகம்..!! பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயாரும், பிரபல பரதநாட்டிய கலைஞருமான கிரிஜா பக்கிரி சாமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.

தமிழ் சினிமாவில் ‘முருகன் காட்டிய வழி’ என்கிற படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டு, திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழில் மட்டும் சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், 90களில் ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கமலும், ரஜினியும், இணைந்து நடித்துள்ள ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

பெரும் சோகம்..!! பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

தமிழைத் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீப்ரியா, நடிப்பை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக கலைஞராகவும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியிலும் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். இந்நிலையில், இவரின் தாயாரான கிரிஜா பக்கிரி சாமி, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான குரு காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிஜா பக்கிரிசாமி ‘காதோடு தான் நான் பேசுவேன்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதே போல் நீயா, நட்சத்திரம், போன்ற படங்களை மகளுடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார்.

பெரும் சோகம்..!! பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக வரும் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த இவர் மயிலாப்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். இவருக்கு நடிகை ஸ்ரீபிரியாவை தவிர ஸ்ரீகாந்த் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். இவருடைய இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

"HEART ATTACK, CANCER" போன்ற நோய்களை ஏற்படுத்துமா இவை!!! பெண்களே கவனமாய் இருங்கள்...

Wed Nov 23 , 2022
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோய் உள்பட பயங்கரமான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சானிட்டரி நாப்கின்களில் அபாயகரமான ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ரசாயன பொருட்கள் உள்ள நாப்கின்களை பயன்படுத்தும்போது புற்றுநோய், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டும் இன்றி குழந்தையின்மை […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like