fbpx

பெரும் சோகம்..!! முன்னாள் அமைச்சர் குட்டி அகமது குட்டி காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவரும் கேரள முன்னாள் அமைச்சருமான குட்டி அகமது குட்டி காலமானார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவர் குட்டி அகமது, 2004-06ஆம் ஆண்டு உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து 2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த கார் விபத்துக்குப் பிறகு அவர் சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். தற்போது, தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள குட்டி அகமது, கட்சியின் மாநில துணைத் தலைவராகவும், மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

1992ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தனுரில் இருந்து எம்எல்ஏவாகவும், பின்னர் 1996 மற்றும் 2001இல் திருஅங்காடியில் இருந்தும் எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், வயது தொடர்பான நோய்களால் குட்டி அகமது குட்டி தனுரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குட்டி அகமது மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More : பங்குச்சந்தை இறக்குவதை முன்கூட்டியே கணித்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் ஹுண்டன்பர்க்..!! அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!

English Summary

Indian Union Muslim League senior leader and former Kerala minister Kutty Ahmed Kutty passed away.

Chella

Next Post

ஐடிஐ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! விமானம், ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை..!!

Sun Aug 11 , 2024
Must have passed 10th class and completed ITI in relevant discipline.

You May Like