fbpx

பெரும் சோகம்..!! பழம்பெரும் மலையாள நடிகை சுப்புலட்சுமி காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

பழம்பெரும் மலையாள நடிகை சுப்புலட்சுமி (87) உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, அம்மணி, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 1951ஆம் ஆண்டில் இருந்து அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். பின்னர், தனது 66 வயதில் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் கன்னடம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் இசைக் கலைஞர், நடன கலைஞர், ஓவியர் என பன்முக திறமைகளை கொண்டவர்.

இந்நிலையில் 87 வயது நிரம்பிய இவர் நேற்று இரவு கொச்சியில் இருக்கும் தனது வீட்டில் வயது முதிர்வு காரணமாக காலமானார். ஆர்.சுப்புலட்சுமியின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

’டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்’..!! அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Fri Dec 1 , 2023
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 6,029 அரசுப் பள்ளிகளின் மிஷன் இயற்கை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3,700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 3,000 பள்ளிகளில் பசுமை அமைச்சரவைகள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அதில் உள்ள பள்ளி மாணவர்கள், வீடுகள் மற்றும் சமூக சுற்றுச்சூழலை சீராக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதில் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு […]

You May Like