Hina Khan: மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நாகினி பிரபலமான நடிகை ஹினா கான் தனது தந்தையின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகை ஹினா கான். 36 வயதான இவர், பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.‘நாகினி-5’ தொடரில் நடித்ததன் மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இவர், தனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என கடந்த ஜூன் 28-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதனை தொடர்ந்து கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு படப்பிடிலும் கலந்துகொண்டிருந்தார்.
அவரது பதிவில், நாட்கள் குறைவாக இருந்தாலும் அதில் மகிழ்ச்சியுடன் வாழ எப்போதும் மறக்காதீர்கள். இந்த நாட்கள் உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலில் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; வித்தியாசங்களை தழுவிக்கொள்ளுங்கள். பின் அதனை இயல்பாக்கி கொள்ளுங்கள் என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டிருந்தார். இவருக்கு இஸ்டாகிராமில் 20.2 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர், இதேபோல், ஆகஸ்ட் 8ம் தேதியான புதன் கிழமை தனது அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
அதில், “அப்பா நான் எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க முடியும், ஆனால் நான் உன்னை நினைவில் கொள்ளும்போது, என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என உருக்கத்துடன் பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்களும் உணர்ச்சிவசப்பட்டு ஹினாவுக்கு அனுதாபம் தெரிவித்தனர். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 20அன்று ஹினா கானின் தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் ஹினா கான் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: ஷாக்!. 4,000-க்கும் மேற்பட்ட சடலங்கள் திருட்டு!. சட்டவிரோத செயலால் சீன குற்றப்பிரிவு அதிர்ச்சி!