பெரும் சோகம்..! கோவிலுக்கு வந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு.

சிவகங்கை மாவட்டம், பிரான் மலை அருகே உள்ள காலடி பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக

இவரது 8 வயது மகள் வர்ஷா குடும்பத்துடன் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக மனைவி சங்கீதபிரியா மற்றும் மகள் வர்ஷா (8), ஆகியோருடன் வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாரின் மக்கள் வர்ஷா இயற்கை உபாதைக்காக கோவிலுக்கு வெளியே சென்றபோது அங்கிருந்த இரும்பு மின்சார கம்பியை தொட்டுள்ளார். அப்போது அதில் கசிந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார்.

இக்கோவிலுக்கு வெளியே மூன்று மின்கம்பங்கள் உள்ளது. இவை அனைத்தும் இரும்பால் ஆன மின்கம்பங்கள். திருப்புவனம் மின்வாரியமும் கோவில் நிர்வாகமும் முறையாக சிமெண்ட் மின்கம்பம் அமைக்காததால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிறுமி உயிரிழப்பு கிருத்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்ட்றது விசாரித்து வருகின்றனர்.

Read More: பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்கள் கவனத்திற்கு!! துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு – ரீசெண்ட் அப்டேட்!

Kathir

Next Post

அதிக நேரம் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் அபாயம் - ஆய்வில் அதிர்ச்சி!

Tue Jun 4 , 2024
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படலாம் என ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தினசரி 6 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்த நிலையில் இருக்கும் குழந்தைகள், இளம் வயதிலேயே கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் சிரோசிஸ் போன்றவற்றை உருவாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த அபாயங்களைக் குறைக்க வேண்டுமெனில் நம் உடலை நல்ல ஆக்டிவாக வைத்துக்கொள்ள […]

You May Like