மூத்த பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கௌசிக் காலமானார். அவருக்கு வயது 67.
ஏப்ரல் 13, 1956ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார் சதீஷ் கௌசிக். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1987ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, ஹம் ஆப்கே தில் மே ரெஹ்தே ஹைன், தேரே நாம், கியோன் கி, மேலும் சமீபத்தில் பங்கஜ் திரிபாதியுடன் காகஸ் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
அவரது மறைவுக்கு நடிகர் அனுபம் கேர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மரணமே இந்த உலகத்தின் இறுதி உண்மை என்று எனக்குத் தெரியும்! நீ இல்லாமல் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்! ஓம் சாந்தி!” என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.