பிரேசிலின் அமேசான் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் கைக்குழந்தை உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
விமான விபத்து தொடர்பாக பிரேசிலின் மேற்கு மாநிலமான ஏக்கர்(Acre) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள பிரதான விமான நிலையத்திற்கு அருகில் ஒற்றை எஞ்சின் செஸ்னா கேரவன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில், ஒரு கைக்குழந்தை உட்பட பத்து பயணிகள் மற்றும் விமானிகள் 2 பேர் என 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளில் பலர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அமேசானாஸ் மாநிலத்திற்குத் திரும்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக செப்டம்பரில், அமேசானாஸ் நகரமான பார்சிலோஸில் புயலின் போது தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.