கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி மாவட்டத்தில் சாய் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டுச் சென்ற பக்தர்கள், இரவு கோவில் அறையில் தங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனே தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. போலீசாரின் விசாரணையில், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தங்கியிருந்த வீட்டில் சமைத்த பிறகு கேஸ் சிலிண்டரை சரியாக அணைக்காததால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : இன்று மார்கழி அமாவாசை..!! வீட்டு வாசலில் யாரும் கோலம் போடாதீங்க..!! ஏன் தெரியுமா..?