Petrol tanker explosion: நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட மத்திய நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவை வடக்கு நகருடன் இணைக்கும் சாலையின் டிக்கோ சந்திப்பில் காலை 10 மணியளவில் 60,000 லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இதையடுத்து, சுலேஜா பகுதியில் டேங்கர் லாரியில் இருந்து மற்றொரு டேங்கர் டிரக்கிற்கு ஜெனரேட்டரை பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் லாரி பணியாளர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் உட்பட 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழதவர்களில் பெரும்பாலோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகினர் . சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் தோல்வியடைந்ததால் சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் அங்கு விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. தொடரும் விபத்துகளால், அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் டேங்கர் மற்றும் கால்நடைகளை ஏற்றிச்சென்ற டிரக் மோதிய விபத்தில் 48 பேர் பலியாகினர்.நைஜீரியாவின் ஃபெடரல் ரோடு சோஃப்டி கார்ப்ஸின்படி, 2020ல் 1,531 பெட்ரோல் டேங்கர் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 535 பேர் உயிரிழந்தனர். 1142 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: 16 வயது சிறுவனுடன் உடலுறவு!. யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்த சிறுமி!. சிசுவுக்கு நேர்ந்த சோகம்!