டாட்டா மோட்டார்ஸின் பிரபலமான கார் மாடல்களில் ஹாரியரும் ஒன்று. இது ஒரு எஸ்.யூ.வி ரக கார் என்று கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் அதிக சொகுசு வசதிகளை கொண்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே தளத்தை கொண்டுதான் டாட்டா மோட்டார்ஸ் இந்த காரை வடிவமைத்திருக்கிறது.
இதன் காரணமாக தானோ என்னவோ மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி காராக அது காட்சி தருகிறது. இந்த மாடலின் எலக்ட்ரிக் வர்ஷனையே டாடா மோட்டார்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலமாக மிக விரைவில் டாட்டா ஹாரியர் இவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் இந்த நிறுவனம் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் எக்ஸாம் டிவி பிரைம் டி கோட் இபி மற்றும் டி ஆர் கோவிவி உள்ளிட்ட எலக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகிறது.
இவற்றின் வரிசையில், வெகு விரைவாக ஹாரியர் இவி இணைய உள்ளது. இது விற்பனைக்கு வந்தால் அந்த நிறுவனத்தின் மிக அதிக விலை கொண்ட எலக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், இந்த நிறுவனத்தின் அதிக விலை கொண்ட எலக்ட்ரிக் காராக எக்ஸாம் இவி மேக்ஸ் காணப்படுகிறது இது ஒரு முழு சார்ஜில் 453 கிலோமீட்டர் வரையில் மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது