fbpx

செம வாய்ப்பு…! ரேஷன் அட்டையில் திருத்தம் இருக்கா…? எங்கும் அலைய வேண்டாம்… ஆட்சியர் அறிவிப்பு…!

சேலம் மாவட்டத்தில், பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 14.10.2023 அன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், சென்னை அவர்களின் அறிவுரைப்படி, சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அக்டோபர்-2023 மாதம் இரண்டாவது சனிக்கிழமை 14.10.2023 அன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம். இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கைபேசி எண் பதிவு மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

National Cinema Day: இன்று தேசிய சினிமா தினம்!... ரூ.99க்கு டிக்கெட் விற்பனை!

Fri Oct 13 , 2023
National Cinema Day (தேசிய சினிமா தினம்) இன்று தேசிய சினிமா தினத்தையொட்டி சினிமா டிக்கெட்டுகள் 99 ரூபாய்க்கு விற்கப்படும் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. சினிமா என்பது மகிழ்ச்சியின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. உலகளவில் சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இந்தியாவில் சினிமாவை எமோஷனலாக பார்ப்பவர்கள் உண்டு. அதனால்தான் உலகிலேயே அதிகம் சினிமா தயாராகும் நாடாக இந்தியா விளங்குகிறது. அதுமட்டுமின்றி சினிமா மீது இருக்கும் மோகத்தின் காரணமாக […]

You May Like