தருமபுரியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களைசார்ந்த விவசாயிகளின் சூறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, இன்று காலை 11 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் சூறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயசங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என வருவாய் கோட்ட அலுவலர் வலியுறுத்தி உள்ளார் .