அதிர்ச்சி..!! 9 நாட்களில் 8 பேரை காவு வாங்கிய ஜப்பானிய மூளைக்காய்ச்சல்..! திணறும் சுகாதாரத்துறை..!

அசாம் மாநிலத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 9 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியே பரவி பலரது உயிரை பறிக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல், மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரை நீடிக்கிறது. ஏற்கனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில், கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது.

8 Dead, 82 Infected After Japanese Encephalitis Outbreak In Flood-Hit Assam  | அசாமில் வெள்ளத்திற்கு மத்தியில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்...! 8  பேர் உயிரிழந்த நிலையில் ...

இந்நிலையில், மாவட்ட விரைவுப் பதில் குழுக்களை அமைக்கவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ஆம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Chella

Next Post

#Flash: தொடர்ந்து உச்சத்தில் செல்லும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...! 42 பேர் உயிரிழப்பு...

Sun Jul 10 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,257 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 42 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 14,553 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like