சிறந்த ஸ்நாக்ஸ், அதுவும் சுலபமாகவும், விலை கம்மியாகவும் இருக்க வேண்டும் என்றால் அது வேர்கடலை தான். ஆம், வேர்கடலையில் புரதம், மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், நியாசின், இரும்புச்சத்து போன்ற பல முக்கிய தாதுக்கள் உள்ளன. இவை எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வேர்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். இதனால் நீரிழிவு உள்ளவர்களுக்கு வேர்கடலையை விட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் இருக்க முடியாது. மேலும், இதில் உள்ள நல்ல கொழுப்புகள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இதில் இருக்கும், நியாசின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட்கள், திசுக்களில் பாதிப்புகள் வராமல் பாதுகாக்க உதவும். ஒரு வேலை நீங்கள் ஜங்க் உணவுகள் சாப்பிடும் பழக்கத்தை குறைக்க விரும்பினால், வேர்கடலை ஒரு சிறந்த தீர்வு. ஏனென்றால், வேர்கடலையில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம், நீண்ட நேரத்திற்கு வயிறை நிறைவாக வைத்திருக்கும். இதனால் அதிக உணவு சாப்பிடும் பழக்கம் குறைந்து விடும். இதனால் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.
வேர்கடலையில் இத்தனை நன்மைகள் இருந்தாலும், மற்றொரு பக்கம், இது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, குமட்டல், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேர்கடலையை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் போது, அதில் உள்ள கலோரிகள் எடையை கூட்டுவதற்கும் வாய்ப்பு உள்ளது. வறுத்த மற்றும் உப்பு வேர்கடலையில் ட்ரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சோடியம் அதிக அளவில் இருப்பதால், இதில் நன்மையை விட தீமைகள் அதிகம்.
Read more: இந்த அறிகுறிகள் இருந்தால்.. மனதிற்கு ஓய்வு தேவை என்று அர்த்தம்..!! அலட்சியம் வேண்டாம்..