fbpx

நோட்…! குரூப் 1 சான்றிதழ்… இ-சேவை மூலம் பதிவேற்றம் செய்யலாம்…! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு…!

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்யாதவ்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, “ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வு – 1(குரூப்- 1) இல்‌ அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில்‌, நேரடி நியமனம்‌ செய்வதற்கு விண்ணப்பதாரர்களால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌ சரிபார்ப்புக்கு பின்னர்‌ சில சான்றிதழ்கள்‌ முழுமையாக பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள்‌ 21.7.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ விடுபட்ட மற்றும்‌ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல்‌ விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்‌ மற்றும்‌ குறிப்பாணை TNPSC மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும்‌ குறிப்பாணையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள, இ-சேவை மையங்கள்‌ மூலமாக பதிவேற்றம்‌ செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்‌. அவ்வாறு தவறும்‌ பட்சத்தில்‌, அத்தகைய விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்பம்‌ முழுவதுமாக நிராகரிக்கப்படும்‌ என தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

குக்கு வித் கோமாளி வைல்ட் கார்டில் வெற்றி பெற்ற பிரபலம் யார் தெரியுமா...? இணையத்தில் வெளியான தகவல்...!

Sat Jul 8 , 2023
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குக்கு வித் கோமாளி விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய 4வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை யாரும் […]

You May Like