கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த 2️ வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்து அதன் பின்னர் நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் குரூப் 2ஏ பதவிகளுக்கான சென்ற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்த 55,071 நபர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்.
இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.வனப் பயிற்சியாளர் பணிகள், புள்ளியல்துறை நூலகர் பணியிடங்கள், மாவட்ட கல்வி அலுவலர் போன்ற பல பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.