fbpx

இன்றுமாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்14!

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே அனுப்புவதற்காக இன்சாட் 3டிஎஸ் செயற்கைகோள் இன்றுமாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது

நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது.

இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. புயல், கனமழை போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது.
இதில் உள்ள 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள், புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைத் தகவல்களை துல்லியமாக வழங்கும். வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இன்சாட் 3டிஎஸ் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் ராக்கெட் ஏவுதலுக்கான 27.5 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று பகல் 2 மணியளவில் தொடங்கியது. அதன்படி, இன்சாட்-3டி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்றுமாலை 5.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

Kokila

Next Post

ஐயோ...! கன்றுவீச்சு நோய்... மனிதனுக்கு நேரடியாக பரவும்...! உடனே இந்த இலவச தடுப்பூசி போட வேண்டும்...!

Sat Feb 17 , 2024
கன்று வீச்சு நோய் தடுப்பூசி மருந்துகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கன்றுவீச்சு நோய் ப்ரூசெல்லா அபார்ட்ஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளில் கன்றுவீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு வராமல் தடுக்க கன்று வீச்சு நோய் தடுப்பூசி […]

You May Like