fbpx

செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.63 லட்சம் கோடி..! மத்திய அரசு மாநில ராசு வருவாய் எவ்வளவு தெரியுமா..!

இந்திய அரசாங்கத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செப்டம்பர் மாதத்தில் 10.2 சதவீதம் உயர்ந்து 1.63 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் இது ஆகஸ்ட் மாத வசூலை விட செப்டம்பர் மாதத்தில் 2.3 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏழாவது மாதமாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

சமீபத்திய ஜிஎஸ்டி தரவு 2023-24ல் சராசரி மாத வசூல் ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளது. மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் பல ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. கடந்த 2017-18 முதல், மாதத்திற்கு சராசரியாக ரூ. 1 லட்சம் கோடி வசூளிக்கிறது, பின்னர் 20202-21 தொற்றுநோய்க்குப் பிறகு வசூல் வேகமாக உயர்ந்து 2022-23ல் சராசரியாக ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்தது.

2023-24 முதல் ஆறு மாதங்களில் சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் 2022-23 முதல் பாதியில் இருந்ததை விட 11 சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அனால் 2022-23 ஆம் ஆண்டுக்கான சராசரி மாதாந்திர வசூலை விட இந்த ஆண்டு இதுவரையிலான சராசரி மாதாந்திர வசூல் 9 சதவீதம் மட்டுமே அதிகம் என கூறப்படுகிறது. 2023-24 பட்ஜெட்டின்படி, நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் உயரும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

செப்டம்பரில், மத்திய ஜிஎஸ்டி ரூ.29,818 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடியாகவும், இழப்பீடு செஸ் ரூ.11,613 கோடியாகவும் இருந்தது. செப்டம்பரில், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.33,736 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.27,578 கோடியும் அரசு செட்டில் செய்தது. இதன் விளைவாக, தீர்வுக்குப் பிந்தைய மாதத்திற்கான மொத்த வருவாய் மத்திய அரசுக்கு ரூ.63,555 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.65,235 கோடியாகவும் இருந்தது.

“மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து வருவாயை விட 14 சதவீதம் அதிகம்” என்று நிதி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பெண், செய்த காரியம்..

Sun Oct 1 , 2023
தற்போது உள்ள காலகட்டத்தில், சர்க்கரை நோய் அனைவருக்கும் இருக்கும் ஒரு சாதாரண வியாதி ஆகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அநேகருக்கு இந்த சர்க்கரை நோய் உள்ளது. இந்நிலையில், சர்க்கரை நோயால் அவதி பட்டு வந்த பெண் ஒருவர் செய்த காரியம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளம், நடுத்தெருவை சேர்ந்தவர் 41 வயதான கவிதா. இவருக்கு 43 வயதான காமராஜ் என்ற கணவரும், […]

You May Like