fbpx

கடந்த மாதம் தமிழகத்தின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.8,551 கோடி…!

2022-ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,45,867 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.4 லட்சத்தை தாண்டி வசூலாகியுள்ளது. மத்திய அரசு மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.33,997 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.28,538 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாயில் இருந்து வழங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.59,678 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.61,189 கோடியும் கிடைத்துள்ளது. .

இது தவிர நவம்பர் மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.17 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 11 சதவீதம் அதிகமாகும். நவம்பர் 2022க்கான தமிழகத்தின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.8,551 கோடியாக உள்ளது.

Vignesh

Next Post

’நான் செத்துட்டேன் நம்புங்க’..!! இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய காதல் ஜோடி..!! பகீர் சம்பவம்..!!

Sat Dec 3 , 2022
தான் இறந்ததாக நம்பவைக்க மற்றொரு பெண்ணை கொலை செய்து நாடகமாடிய பெண் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள பாத்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் பாயல். இவருடைய காதலர் அஜய் தாகுர். சில தினங்களுக்கு முன்னர் பாயல் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு அதனை தனது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், பாயல் வீட்டிலிருந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் […]
’நான் செத்துட்டேன் நம்புங்க’..!! இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய காதல் ஜோடி..!! பகீர் சம்பவம்..!!

You May Like