fbpx

தினமும் இந்த பழத்தை 2 சாப்பிட்டால் போதும்..!! உடலில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!!

வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் “கொய்யா பழம்” பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தினமும் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தை கொடுக்கும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது. கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது.

கொய்யா பலம் ரத்தத்தில் அதிகம் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. ரத்தம் அதிகம் கெட்டியாகாமல் அதன் நீர்ம தன்மையை பாதுகாக்கும் சக்தியும் கொய்யா பழத்திற்கு உண்டு. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் ரத்தத்தில் நச்சுக்களை அனைத்தும் நீங்கி ரத்தம் சுத்தமாகிறது. ரத்ததின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதிறனாரும் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம். சருமத்துக்கு மிகவும் நல்லது கொய்யா. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக் குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது. ஸ்கர்வி என்பது “வைட்டமி சி” சத்தின் குறைபாட்டால் பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படுவது, பற்கள் உடைந்து விடுவது, உடலின் எலும்புகள் வலுவிழப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் நோயாகும். இந்நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவது சிறந்ததாகும்.

இன்று உலகளவில் பலரையும் பாதிக்கும் ஒரு மனம் சம்பந்தமான பாதிப்பாக மன அழுத்தம் இருக்கிறது. கொய்யா பழத்தில் “மெக்னீசியம்” தாது அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஓய்வளிக்கும் ஆற்றலை கொண்டது. மூளையின் செல்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மையும் கொண்டது. கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மன அழுத்தம் ஏற்படாதவாறு தடுக்கலாம். நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.

Read More : ”இனி ரேஷன் பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை”..! முதற்கட்ட பணியை தொடங்கிய தமிழ்நாடு அரசு..!!

English Summary

In this post we will see what are the benefits of eating guava fruits.

Chella

Next Post

Stock Market : நிஃப்டி முதல்முறையாக 25,000 ஐ கடந்தது..!! ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் புதிய சாதனையை எட்டியது..!!

Thu Aug 1 , 2024
Nifty crosses 25,000 for first time, Sensex at all-time high in early trade

You May Like