fbpx

இருமலை விரட்டி அடிக்கும் கொய்யா இலை..!! எப்படி பயன்படுத்துவது..? ஏராளமான நன்மைகள் கிடைக்கும்..!!

இருமல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கடுமையான இருமல் இருந்தால் சில சமயங்களில் சுவாசிப்பதற்கு கூட சிரமமாக இருக்கும். இதற்கு நம் தாய்மார்களும், பாட்டியும் தங்கள் கைவசம் உள்ள வீட்டு வைத்திய முறைகளை கூறுவார்கள். அது நமக்கு உடனடி நிவாரணத்தை தரக்கூடியதாக இருக்கும்.

அது போல்தான் பல நூற்றாண்டுகளாக இருமலை குணமாக்க கொய்யா இலை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகியவை உள்ளது. இவை அனைத்திற்கும் இருமலை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொய்யா இலை டீ : கையளவு கொய்யா இலைகளை எடுத்து வெந்நீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், வடிகட்டிய நீரில் சுவைக்காக கொஞ்சமாக தேன் அல்லது லெமன் கலந்து குடிக்க வேண்டும். இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

நேரடியாக சாப்பிடலாம் : கொய்யா இலையை அப்படியே நேரடியாக கூட மென்று சாப்பிடலாம். கொய்யா இலையை சுத்தமாக கழுவி வெறு வயிற்றில் சாப்பிடலாம்.

சமையலில் கொய்யா இலை : கொய்யா இலை டீ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதை சூப்பிலோ அல்லது வறுத்த உணவுகளோடோ சேர்த்து சாப்பிடலாம்.

காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலையை சாப்பிட்டால் இருமல் குணமாகும். கொய்யா இலையில் பல நன்மைகள் இருந்தாலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிடலாமா? என்பது குறித்து போதுமான ஆய்வுகள் செய்யப்படவில்லை. அதேப்போல் ஒரு சிலருக்கு கொய்யா இலையும் பழமும் அலர்ஜியை உண்டாக்கும். ஆகவே, உங்கள் டயட்டில் கொய்ய இலையை சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசித்து கொள்ளுங்கள். மற்றொரு விஷயம் என்னவென்றால், கொய்யா இலையை அளவாகவே சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அரிப்பு, குமட்டல், வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! அகவிலைப்படி 53% ஆக உயர்வு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

English Summary

Guava leaf that chases away cough..!! Try using it like this and you will get many benefits..!!…

Chella

Next Post

முதல்வரே நீங்க செய்வது மலிவான அரசியல்... CM ஸ்டாலின் கருத்துக்கு ஆளுநர் பதிலடி...!

Sat Oct 19 , 2024
Chief minister it's cheap politics...Governor's response to CM Stalin's comments

You May Like