fbpx

குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியீடு..!

நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாயணையம் வெளியிட்டுள்ளது.  

7,301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருக்கிறது. இத்தேர்வினை 9,35,354 ஆண்கள், 12,67,457 பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 22 லட்சத்து 20 ஆயிரத்து 942 பேர் எழுதுகின்றனர். 7,689 மையங்களில் நடக்க இருக்கும் தேர்வை கண்காணிக்க 1,10,150 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், மேலும் 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் என தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் தற்போது நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாயணையம் வெளியிட்டுள்ளது. அதில்,

காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும்.
9 மணிக்கு OMR தாள்கள் வழங்கப்படும்
12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது.
மேலும் முகக்கவசம் கட்டாயம்.
OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
OMR தாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது.
விடைதெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் குறிக்க வேண்டும்.
ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் தேர்வு அறைக்கு எடுத்துவரக்கூடாது.
முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

Rupa

Next Post

குடிபோதையில் நடந்த பயங்கரம்... நண்பனின் கழுதறுத்து கொலை செய்த கொடூரம்.. சிக்கியவரிடம் விசாரணை..!

Sat Jul 23 , 2022
நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலை பணி நடக்கிறது. அங்கிருக்கும் குலாளர் தெரு அருகில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள் நான்கு வழிச்சாலை வேலை நடைபெறும் இடத்திற்கு சென்று மது குடிப்பது வழக்கம். அதே போல நேற்று இரவு சிலர் மது வாங்கி சென்று குடித்துள்ளனர்.அப்போது திடீரென்று அங்கு அலறல் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் சத்தம் […]

You May Like