நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தை தமிழ்நாட்டில் 37-ஆவது இனமாக பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு, பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைப் பெற தகுதியடைய ஏதுவாக தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது.
பழங்குடியினர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர்கள், சார் ஆட்சியர்கள் நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயமக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழை மேற்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சான்றிதழை வழங்க வேண்டும்.