ரஷ்யாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஸ்வஸ்திக் குறியீடு கொண்ட டி.ஷர்ட் அணிந்து வந்த மர்மநபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து கிழக்கே இஷ்வெஸ்க் பகுதியில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. காலை பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர் காவலாளி , ஆசிரியர்கள் உள்பட பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இந்த தாக்குதலில் பள்ளி மாணவர்கள், காவலாளி , ஆசிரியர்கள் என மொத்தம் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். அனைவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டான. இதில் 21 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பள்ளியில் குழந்தைகள் , ஆசிரியர்களை வெளியேற்றினர். பின்னர் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்குழு போலீசார் மர்மநபர் கருப்புநிறத்தில் டி.ஷர்ட்டில் சிவப்பு நிறத்திலான ஸ்வஸ்டிகா குறியீடு கொண்ட டி.ஷர்ட் அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்வஸ்திகா குறியீட்டின் பூர்வீகம் ஜெர்மனி ஆகும். அந்நாட்டில் இதை அதிரஷ்ட குறியீடாகவும் கடவுளாகவும் பார்க்கின்றார்கள். இதை ஜெர்மனியில் நாஜி குறியீடாகவும் பயன்படுத்தினார்கள். இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் இது தொடர்பான முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இறந்தவர்களின் எத்தனை பேர் குழந்தைகள், எத்தனை பெரியவர்கள், வந்த மர்மநபர் யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. முழு விசாரணையும் நடந்த பின்னரே எதற்காக துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்புடைய தாக்குதலாக இதை கருத முடியாது. எனவும் இந்த வழக்கை விசாரித்துள்ள விசாரணைக்குழு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.