JOB: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பொது தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் எமினன்ஸ் 8 பொது நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் சமீபத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கான பதவிகளின் எண்ணிக்கை, வயது வரம்பு, சம்பளம், தகுதி போன்ற அனைத்து விவரங்களையும் விரிவாக பார்க்கலாம். ஐஐடி மெட்ராஸ் ஆட்சேர்ப்பு பற்றிய விவரங்கள்: பதவியின் பெயர்: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், பணிஇடம்: சென்னை – தமிழ்நாடு, சம்பளம்: ரூ. 18,000/- மாதம், வயது வரம்பு 28க்குள் இருக்கவேண்டும். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கடைசி தேதி: 25-03-2024க்குள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு… டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9000 கோடி ரூபாய் முதலீடு…!