திருமணத்திற்குப் பிறகு, ஒவ்வொரு ஆணும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு அவர்களது உடலில் எந்த பலவீனமும் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பொதுவாகவே, ஒரு ஆண் தந்தையாக வேண்டுமென்றால், அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், கருவுறுதல் பலவீனமாகி, திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்படும். இந்த காலக்கட்டத்தில் விந்தணு எண்ணிக்கை ஆண்களுக்கு குறைந்து இருக்கிறது. உடலில் ஒரு மில்லி லிட்டர் விந்துவில் 1.5 மில்லியன் முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்கள் எண்ணிக்கை இருக்கும்.
அவை குறையும்போது விந்தணுக்களின் குறைபாட்டால் குழந்தை இல்லாமல் போகும். இந்த குறைபாட்டை சரி செய்ய பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சூரியகாந்தி விதைகள்:
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ இருப்பது, விந்துவின் தரத்தை அதிகப்படுத்தும்.
தர்பூசணி விதைகள்:
தர்பூசணி விதைகள் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது. இதனால் ஆண்களின் கருவுருதல் மேம்படும்.
பூசணி விதைகள்:
பூசணி விதைகளில் துத்தநாகம் அதிகம் இருப்பது, விந்தணு உற்பத்திக்கு முக்கியமானது. ஆண்மை விந்துச்சுரப்பியான டெஸ்டோஸ்டிரோன் அளவை இது மேம்படுத்த உதவுகிறது,
சிவப்பு அரிசி:
சிவப்பு அரிசியில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், துத்தநாகம் உள்ளது. இதனால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
கீரைகள்:
கீரையில் அதிகளவு ஃபோலிக் அமிலம் இருப்பதால், அவற்றை உண்ணும்போது விந்தணுக்களின் பரவும் திறனை அதிகரிக்கும்.
கருப்பு சாக்லேட்:
கருப்பு சாக்லேட்கள் பெண்களைவிட ஆண்களுக்கு விந்தணுவின் தரத்தை மேம்படுத்துவதில் அதிகம் பயன்படுகிறது.
வாழைப் பழங்கள்:
வாழைப்பழத்தில் இருக்கும் டிரிப்டோன், பின்னர் செரோடோனினாக மாற்றப்படுகிறது. செரோடோன் மனநிலையை மேம்படுத்தி, மனச்சோர்வை தவிர்க்கிறது. ஆண் பாலின ஹார்மோன் லிபிடோவை மேம்படுத்த இது உதவுகின்றன.
முட்டை:
பல உணவுகளில் இல்லாத தாதுக்கள் முட்டையில் இருக்கிறது. குறிப்பாக வைட்டமின் கே, வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, துத்தநாகம், கால்சியம் ஆகியவை முட்டையில் இருக்கிறது. முட்டையில் உள்ள புரதம் விந்தணு உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகிறது.