ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே அழகான கூந்தல் வேண்டும் என்பது தான் பெரிய ஆசையாக இருக்கும். ஏனென்றால், தற்போது உள்ள காலகட்டத்தில் முடி உதிர்வு அதிகம் உள்ளது. இன்னும் சிலருக்கு முடியே இருப்பது இல்லை. இதனால் பலர் தங்களுக்கு அழகான முடி இருப்பதே பெரிய கனவு என்ற அளவிற்கு மாறிவிட்டனர். இதற்க்கு முக்கிய காரணம் நம் முன்னோர்கள் பின்பற்றின பல நடைமுறைகளை நாம் பின்பற்றாதது தான். நாகரிகம் என்ற பெயரில், நாம் கூந்தலுக்கு தேவையான பராமரிப்பையும் போஷாக்கையும் நாம் கொடுப்பதில்லை. அந்த வகையில், நமது கூந்தலை பராமரிக்க நமது முன்னோர்கள் பின்பற்றின பழங்கால நடைமுறைகளில் ஒன்று ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன் முடிக்கு எண்ணெய் தடவுவது.
இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றி வந்தனர். ஆனால் இன்று பலர் எண்ணெய் வைப்பதே இல்லை. ஆனால் அது முற்றிலும் தவறு. ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன், உச்சந்தலை மற்றும் முடிக்கு எண்ணெய் தடவுவதால் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறது. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் இந்த எண்ணெய்களில் எந்த எண்ணெய்யை நீங்கள் குளிப்பதற்கு முன் பயன்படுத்தினாலும் அது உங்கள் முடிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடியை வலிமையாக்கும்.
பொதுவாக நாம் ஷாம்பு பயன்படுத்தும் போது, கூந்தலில் புரத இழப்பு ஏற்படும். ஷாம்புக்களில் உள்ள கடுமையான இரசாயனங்கள், தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றி, வறட்சி மற்றும் உதிர்தலுக்கு வழிவகுக்கும். ஆனால் ஷாம்பு போடுவதற்கு முன் எண்ணெய் தேய்ப்பதால், முடி தண்டில் பாதுகாப்பு அடுக்கு உருவாகி புரத இழப்பைக் குறைக்கப்படுவதோடு முடியில் ஏற்படும் வறட்சியையும் தடுக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Read more: உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கா? அப்போ உடனே இதை செய்யுங்க..