fbpx

அரையாண்டு தேர்வு விடுமுறை..!! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 6, 8, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய, அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஆண்டு அட்டவணையில் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரையாண்டு தேர்வு விடுமுறை..!! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

அதன்படி, அரையாண்டு தேர்வை எழுதி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு அசைமென்ட்டுகளை மட்டும் வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

பல ஆண்களுடன் இரவு பகலாக சேட்டிங்! கடுப்பான கணவர் பியூட்டிஷியன் படுகொலை!

Fri Dec 23 , 2022
இப்பொழுதெல்லாம் ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுடைய கணவனுக்கு தெரியாமல் பல திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது சகஜமாகிவிட்டது. ஆனால் இது வெளியில் தெரியாத வகையில் அனைத்தும் நன்றாகத்தான் செல்கிறது. வெளியில் தெரிந்த பிறகு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது, என்ன ஒரு மாற்றம் என்றால் ஆண்களை போல இது போன்ற முறை தவறிய உறவு வெளியில் தெரிந்தால் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லாமல் பெண்கள் தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடிவதில்லை. அதுவே […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like