fbpx

ரெடியா…! 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு….! தேதி அறிவிப்பு…! முழு விவரம் இதோ…

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. 6,8,10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும் 7,9,11 வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும்.

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கேள்வித்தாள்களை மண்டல அளவில் உள்ள பள்ளியில் இருந்து பெற்று செல்ல வேண்டும். அதற்காக பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்து கேள்வித்தாள்கள் பெற்றுச் செல்ல வேண்டும். டிசம்பரில் அரையாண்டு தேர்வு – அட்டவணை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை.

காலையில் நடைபெறும் தேர்வுக்கான வினாத்தாள்கள் காலை 7.30 மணிக்கும், மாலையில் நடைபெறும் தேர்வுக்கான வினாத்தாள்கள் மதியம் 12:00 மணிக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்படும். தேர்வினை எந்தவித புகார் அளிக்கும் இடம் அளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மெகா வாய்ப்பு...! கிராம உதவியாளர் பணிக்கு 2,748 காலி பணியிடங்கள்...! உடனே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செஞ்சிடுங்க...!

Wed Nov 30 , 2022
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 04.12.2022 அன்று நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்வு நடைப்பெறவுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு நவம்பர் 30 தேதி எழுத்துத் தேர்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4 -ம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. […]

You May Like