fbpx

Hall Ticket : நாளை முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்…!

10-ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி காலை முதலும், தேர்வு மைய படிவங்களை அதே நாளில் பிற்பகல் முதலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 15-ம் தேதியும், தேர்வு மைய படிவங்களை 16-ம் தேதியும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி காலை முதலும், தேர்வு மைய படிவங்களை அதே நாளில் பிற்பகல் முதலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதே போல 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு மார்ச் 18-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறை அவகாசம் முடிந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்துக்கு சென்று, தங்கள் பள்ளிக்கான பயன்பாட்டாளர் எண், கடவுச்சொல்லை பயன்படுத்தி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுதான் முடிந்தது.

Vignesh

Next Post

கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட IPL டிக்கெட்டுகள்?… சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

Tue Mar 19 , 2024
IPL : முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். நடப்பு ஆண்டின் ஐபிஎல் போட்டி, வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது. கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையை தடுப்பதற்காக இந்தாண்டு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நடைபெறும் என, ஐபிஎஸ் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. […]

You May Like