தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வபோது சிறிது மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், இந்த கோடை மழை சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை தொடர்பான அப்டேட் ஒன்றை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி திண்டுக்கல், தேன், தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மழை பகுதிகளிலும், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு ச்ல இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால், 8 மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் இளைபாறுதல் கிடைக்கும் என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளனர்.
Read More: ஆந்திராவில் பாஜக கூட்டணி கட்சிகள் 106 தொகுதிகளில் வெற்றி பெறும்…! பிரசாந்த் கிஷோர் கருத்து…!