கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி விஞ்ஞானிகளும் பொதுமக்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். சமீபத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் வில்லி சூன் கடவுள் இருக்கிறார் என கணித சூத்திரம் மூலம் நிருபித்தார்.
இந்த கணித சூத்திரத்தை முதலில் கேம்பிரிட்ஜ் கணிதவியலாளர் பால் டிராக் அறிமுகப்படுத்தினார். இந்த சூத்திரம், பிரபஞ்சத்தின் இயற்கை விதிகள் எப்படி சரியான முறையில் செயல்படுகிறன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வடிவில் நடக்கிறது என்று கூறப்படுகிறது.
பால் டிராக் கூறியதாவது, இயற்கையின் விதிகள் கணிதக் கோட்பாடுகளின் வடிவத்தில் இருப்பது சாதாரணம் அல்ல. இதை நமது பிரபஞ்சம் கடவுளின் கணித அறிவுடன் உருவாக்கியிருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள். இந்த சூத்திரம் பிரபஞ்சத்தில் பல விஷயங்கள் வியக்கத்தக்க வகையில் சரியாக நடக்கும் என்பதை வலியுறுத்துகிறது, அதனால்தான் இந்த விஷயம் பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயற்கையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, அடிப்படை இயற்பியல் விதிகள் கணிதக் கோட்பாடுகளின் வடிவத்தில் வழங்கப்படுவது போல் தெரிகிறது என்று டிராக் 1963 இல் எழுதினார். இதைப் புரிந்துகொள்ள ஒருவருக்கு உயர்ந்த கணித அறிவு தேவை, இயற்கை ஏன் இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். ஒரே பதில் என்னவென்றால், நமது தற்போதைய சூழ்நிலை இயற்கை இப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது,
நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘கடவுள் ஒரு கணிதவியலாளர் என்றும், பிரபஞ்சத்தைப் படைப்பதில் அவர் மிக உயர்ந்த கணித சூத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறி இந்த சூழ்நிலையை விவரிக்கலாம்’ என்று அவர் மேலும் கூறினார்.
டக்கர் கார்ல்சனின் பாட்காஸ்டில் பேசுகையில், டாக்டர் சூன் கடவுள் இருப்பதைப்பற்றி தனது கருத்துக்களை விளக்கினார். அவர் கூறுகையில், “இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நம் வாழ்க்கை இப்படி அமைய யார் காரணமாக இருந்து இருப்பார். கடவுள் தான் நமக்கு இந்த ஒளியைக் கொடுத்துள்ளார். ஒளியைப் பின்பற்றவும். நமது திறமைகளை வெளிக்காட்டவும் அவர் உதவியிருக்கிறார்” என்கிறார். அதாவது இந்த உலகில் இயற்பியல் விதிகளால் இத்தனை ஆயிரம் மாற்றங்கள் நடக்கிறது.. இந்த இயற்பியல் விதிகள் இவ்வளவு துல்லியமாக இருக்க இதன் அடிப்படை கணிதம் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அந்தளவுக்குத் துல்லியமான கணிதத்தை உருவாக்கியவர் கடவுள் தான் என்பதே இவர்கள் வாதமாகும். அதேநேரம் கடவுளையும் சயின்ஸையும் இணைத்த முதல் ஆய்வாளர் இவர் இல்லை.
அதேநேரம் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இந்த பார்முலாவுக்கு தனது கடைசி புத்தகத்தில் ஒரு விளக்கத்தை அளித்திருந்தார்.. 2018இல் இறந்த ஸ்டீபன் ஹாக்கிங், 1963ஆம் ஆண்டு 21 வயதாக இருந்தபோது,ஒரு வகையான மோட்டார் நியூரான் நோயான அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் (ALS) நோயால் பாதிக்கப்பட்டார். அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று அப்போது மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவர் கூடுதலாக 55 ஆண்டுகள் வாழ்ந்தார்.
Read more:மானிய விலையில் ஜெனரேட்டர்..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?