fbpx

இன்றும் கனமழை கொட்டி தீர்க்கப் போகுது.. வரும் 11-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

9, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி பின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அஇகபட்ச வெப்பநிலை 35 டிஒரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று முதல் 11-ம் தேதி வரை, குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுஇகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.. இதே போல் ஆந்திர கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ. வேகத்துலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.. எங்கு தெரியுமா..?

Fri Jul 8 , 2022
தொடர் கனமழை காரணமாக, வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால், ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் […]

You May Like