பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை ஹரியானா மாநில அரசு திருத்தம் செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை ஹரியானா மாநில அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த உத்தரவுகள் மாநிலம் முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்படும். ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரே ஷிப்ட் பள்ளிகள் இனி காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை நடத்தப்படும்.
ஹரியானா முதல்வர் அலுவலகம் தனது ட்விட்டரில் பக்கத்தில்,” ஹரியானா அரசு மாணவர்கள் பள்ளிக்கு வரும் நேரத்தை இன்று முதல் மாற்றியுள்ளது. இனி ஒற்றை ஷிப்ட் பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரையிலும், இரட்டை ஷிப்ட் பள்ளிகள் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.