ஜார்கண்ட் மாநிலம் ஜாம் ஷெட்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் தபேஷ்குமார் பட்டாச்சாரியா(55). இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் திருமணம் ஆன 8 வருடங்களில் மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து திடீரென்று தலைமறைவானார்.
அதன் பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த அவர் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அங்கு வேலை வாங்கித் தருவதாக பல ஆண் மற்றும் பெண்களை ஏமாற்றியிருக்கிறார் இதன் மூலமாக வெகு நாட்கள் ஏமாற்ற இயலாது என்ற நிலையில், சாதி மேட்ரிமோனி இணையதளம் மூலமாக மிகப்பெரிய மோசடியில் ஈடுபட மிகப்பெரிய திட்டத்தை வகுத்தார். அதன்படி விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஏற்கனவே திருமணம் ஆன பெண்களை குறி வைத்து தன்னுடைய வலையில் வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது.
அதன்படி கடந்த 20 வருடங்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறார். திருமணமான பிறகு அந்த பெண்களுடன் உடலுறவு கொண்ட பின்னர் அவர்களிடமிருந்து பணம், நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விடுவது என்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்த வகையில் இவர் மேற்கு வங்க மாநிலம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் பல மாநிலங்களிலும் பெண்களை ஏமாற்றி மோசடி செய்து கொள்ளையடித்திருக்கிறார். இந்த பெண்களில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் பல படித்த பெண்களும் இருக்கின்றனர்.
ஒரு சில பகுதிகளில் குடும்ப வன்முறை மோசடி புகார்களில் சிக்கியும் சிறைவாசத்திற்கு ஆளாகி இருக்கிறார். ஆனாலும் வெளியே வந்த பின்னர் வழக்கம் போல தன்னுடைய மோசடியில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய நிலையில் பல பெண்கள் புகார்களை வழங்கியதை தொடர்ந்து, ஹரியானா காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு ஒடிசாவில் தலைமுறைவாக இருந்த அவரை கைது செய்துள்ளனர். இவர் அங்கு போதை மறுவாழ்வு மையத்தின் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்